TNPSC Thervupettagam

சரியான வாழ்வாதாரத்திற்கான விருது (Right Livelihood Award)

October 1 , 2018 2150 days 624 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான கௌரவ விருதுகளானது ஊழலுக்கு எதிரான போராளிகளான தெல்மா அல்தனா (கவுதமாலா) மற்றும் இவான் வேலஸ்கியுஸ் (கொலம்பியா) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • இது அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி வழக்கு தொடுத்து அரசுக் கட்டமைப்பின் மீது மக்களுக்கு மறுநம்பிக்கையை ஏற்படுத்திய புதுமையான பணிகளுக்காக வழங்கப்பட்டது.
  • மூன்று பணமளிப்பு விருதுகள் பின்வரும் நபர்களுக்கு வழங்கப்பட்டன.
    • சவுதி அரேபியாவைச் சேர்ந்த, அங்கு சிறைப்படுத்தப்பட்டு இருக்கும் மூன்று மனித உரிமை ஆர்வலர்களான அப்துல்லா அல் ஹமீத், முகமது பகத் அல்-கஹ்தனி மற்றும் வாலித் அபு அல் கஹிர்.
    • பர்கினா பசோ என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயியான யாகூபா சவாகோகோ மற்றும்,
    • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டோனி ரினாடோ
  • முதல்முறையாக இவ்வகையான விருதுகள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சரியான வாழ்வாதாரத்திற்கான விருது

  • இந்த விருதானது 1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது உலகளாவியப் பிரச்சனைகளுக்கு அடிப்படைத் தீர்வுகளாக தொலைநோக்குப் பார்வைகளையும் உயர்வான தீர்வுகளையும் வழங்கும் தைரியமான மனிதர்களையும், நிறுவனங்களையும் கௌரவப்படுத்தி ஆதரவு தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • இது வருடத்திற்கு ஒருமுறை ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும். இது பிரபலமாக மாற்று நோபல் பரிசு என அறியப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்