சரிஸ்கா புலிகள் வளங்காப்பகம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
May 23 , 2024 215 days 329 0
சரிஸ்கா வளங்காப்பகத்தின் முக்கியப் புலிகள் வாழ்விடத்தின் (CTH) 1 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் 68 சுரங்கங்களை மூடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகிய இரண்டும் புலிகள் வளங்காப்பகத்திலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் கற்சுரங்கம் அமைப்பதைத் தடுக்கின்றன.
2005 ஆம் ஆண்டு மே மாதத்தில், டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையில் உள்ள ஆரவல்லி வளங்காப்பகத்தில் புலிகள் காணாமல் போனது குறித்து விசாரிக்க மத்தியப் புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் முதன்முதலில் எடுத்து விசாரித்த நிகழ்விற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சரிஸ்காவில் சட்டவிரோதச் சுரங்கப் பிரச்சினையை நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அந்தப் பகுதியில் உள்ள 262 சுரங்கங்களை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வனப்பகுதிகளில் தற்காலிக சுரங்க அனுமதி வழங்குவதற்கான விதிகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது.
ஆனால் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரசாங்கம் சரணாலயத்தின் எல்லை வரையறுக்கப் பட்டதாகக் கூறியதையடுத்து, சரணாலயத்தின் 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே கற்சுரங்கங்களை அமைக்க அனுமதித்த பிறகு அந்தச் சுரங்கங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.