கௌஹாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகமானது, மீயொலியினைப் பயன்படுத்திக் கரும்புச் சக்கையில் இருந்து சைலிட்டாலை ஒரு பாதுகாப்பான முறையில் உருவாக்குவதற்காக ஒரு நொதித்தல் செயல்முறையை உருவாக்கியுள்ளது.
இது கரும்புச் சக்கைகளில் இருந்து பெறப்படும் ஒரு துணை உற்பத்திப் பொருள் ஆகும்.
இந்த அணுகுமுறையானது வேதியியல் செயல்முறையில் உள்ள செயல்முறை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் பாரம்பரிய நொதித்தல் செயல்முறையில் உள்ள கால தாமதங்களை நிவர்த்தி செய்கிறது.
நொதித்தல் செயல்முறையின் போது மீயொலியினைப் பயன்படுத்துவது என்பது நொதித்தலுக்கான நேரத்தை 15 மணி நேரமாகக் குறைத்தது.
இது உற்பத்தி அளவினைக் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது.