TNPSC Thervupettagam

சர்க்கரைக் கழிவுப் பாகுகளிலிருந்து பொட்டாஷ் உரம் தயாரிப்பு

March 8 , 2024 265 days 202 0
  • சர்க்கரை ஆலைகள் இனி சர்க்கரைக் கழிவுப் பாகுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொட்டாஷ் உரத்தினை உர விற்பனை நிறுவனங்களுக்கு விற்று கூடுதல் வருவாயைப் பெற இயலும்.
  • மேலும் அத்தகைய விற்பனை மீது உர ஊட்டம் அடிப்படையிலான மானியங்களையும் அவை பெற இயலும்.
  • பொட்டாசியம் நிறைந்த உரமான PDM, கரும்பு உற்பத்தி அடிப்படையிலான எத்தனால் தொழிற்துறையின் துணை விளைபொருள் ஆகும்.
  • இது சர்க்கரைக் கழிவுப் பாகு வடிப்பான்களில் உள்ள (சாம்பல்) கழிவில் இருந்து பெறப் படுகிறது.
  • தற்போது, தனது நாட்டின் உர உற்பத்திக்குத் தேவையான 100% பொட்டாஷினை (Muriate of Potash-MOP என்ற வடிவில்) இந்தியா இறக்குமதி செய்கிறது.
  • வடிப்பான்கள் ஆனது, எத்தனால் உற்பத்தியின் போது எஞ்சிய திரவக் கழிவு எனப்படும் கழிவு இரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன என்ற நிலையில். இவற்றை எரித்து சாம்பல் உருவாக்கப்படுகிறது.
  • இந்த சாம்பலைப் பதப்படுத்தி 14.5% பொட்டாஷ் உட்கூறு கொண்ட PDM உரத்தினை உருவாக்கப் படுகிறது.
  • 60% அளவு கொண்ட பொட்டாஷ் உள்ள MOP உரத்திற்கு மாற்றாக விவசாயிகள் இதைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்