ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேசக் காடுகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
மக்களுக்குக் காடுகளின் விழிப்புணர்வு குறித்தும் வறுமை ஒழிப்பு சுற்றுச் சூழல் நிலைப்புத் தன்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் காடுகளின் பங்கு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச காடுகள் தினமாக ஏற்படுத்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று முதன் முறையாக சர்வதேசக் காடுகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இத்தின அனுசரிப்பின் கருத்துரு “காடுகள் மற்றும் கல்வி” என்பதாகும்.