உலக வானிலையியல் அமைப்பானது (WMO - World Meteorological Organisation) “2018 ஆம் ஆண்டின் சர்வதேசக் காலநிலை நிலைமை” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த வெளியீடானது சர்வதேச கால நிலை நிலைமை மீதான WMO அறிக்கையின் 25-வது ஆண்டு நினைவைக் குறிக்கின்றது. இது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
வளிமண்டலத்தில் மிக முக்கியமான பசுமை இல்ல வாயுக்களின் மேல்நோக்கிய வளர்ச்சி, கடல் மட்ட உயர்வு அதிகரிப்பு மற்றும் வடக்கு, தெற்கு துருவ மண்டலங்களில் கடற்பனி உருகுதல் ஆகியவை இந்த அறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகளாகும்.