TNPSC Thervupettagam

சர்வதேசக் காவல்துறையின் முதல் வெள்ளி அறிவிப்பு

January 14 , 2025 8 days 54 0
  • இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளில் மோசடி செய்யப் பட்ட சொத்துக்களைக் கண்டறிவதற்காக சர்வதேசக் காவல் துறையானது தனது முதல் வெள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • கடத்தல் குற்றவாளிகளின் சொத்துக்கள் பற்றிய தகவல்களைக் கோரிய இத்தாலியின் வேண்டுகோளின் பேரில் முதல் வெள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த முன்னோடியான ஒரு திட்டத்தில் இந்தியா உட்பட சுமார் 52 உறுப்பினர் நாடுகள் பங்கேற்கின்றன.
  • தற்போது, ​​ சர்வதேசக் காவல் துறையில் எட்டு வகையான வண்ணக் குறியிடப்பட்ட அறிவிப்புகள் உள்ளன என்ற நிலையில் ஓர் உறுப்பினர் நாடு உலகளவில் குறிப்பிட்ட வகையான தகவல்களைப் பெற இது அனுமதிக்கிறது.
  • சிவப்பு அறிவிப்பு ஆனது ஒரு நாட்டு அரசானது, வேறொரு நாட்டிற்குத் தப்பியோடிய நபர்களைக் காவலில் வைக்கக் கோர அனுமதிக்கிறது.
  • மஞ்சள் அறிவிப்பு ஆனது காணாமல் போனவர்களை, பெரும்பாலும் சிறார்களைக் கண்டுபிடிக்க அல்லது தங்களை அடையாளம் காண முடியாத பல்வேறு நபர்களை அடையாளம் காண உதவுகிறது.
  • நீல அறிவிப்பு ஒரு குற்றவியல் விசாரணை தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கிறது.
  • அடையாளம் தெரியாத பொருட்கள் பற்றியத் தகவல்களைத் தேட கருப்பு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
  • பொது மக்களின் பாதுகாப்பிற்கு மிக அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்ற ஒரு நபரின் குற்றச் செயல்கள் குறித்து எச்சரிக்கை வழங்குவதற்காக பச்சை அறிவிப்பு வழங்கப் படுகிறது.
  • ஆரஞ்சு அறிவிப்பு ஆனது ஒரு நிகழ்வு, ஒரு நபர், ஒரு பொருள் அல்லது பொது மக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான மற்றும் உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு செயல் முறை பற்றி எச்சரிக்கிறது.
  • ஊதா அறிவிப்பு ஆனது குற்றவாளிகள் பயன்படுத்தும் பலச் செயல்பாட்டு முறைகள், பொருள்கள், சாதனங்கள் மற்றும் பதுங்கு முறைகள் பற்றிய பல்வேறு தகவல்களைத் கோருவதற்கான அல்லது வழங்குவதற்கான அறிவிப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்