TNPSC Thervupettagam

சர்வதேசக் காவல்துறை அறிவிப்பு

January 24 , 2020 1675 days 615 0
  • தப்பியோடிய சர்ச்சைக்குரிய சாமியாரான நித்யானந்தாவைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேசக் காவல்துறையானது ப்ளூ கார்னர் வகை அறிவிப்பை (நீல நிற அறிவிப்பு) வழங்கியுள்ளது.
  • இந்த அறிவிப்புகள் என்பது ஒத்துழைப்பிற்கான சர்வதேச கோரிக்கைகள் அல்லது உறுப்பு நாடுகளில் உள்ள காவல் துறையினர் முக்கியமான குற்றங்கள்  தொடர்பான தகவல்களைப் பகிர அனுமதிக்கும் எச்சரிக்கைகளாகும்.
  • சிவப்பு அறிவிப்பு, மஞ்சள் அறிவிப்பு, நீல அறிவிப்பு, கருப்பு அறிவிப்பு, பச்சை அறிவிப்பு, ஆரஞ்சு அறிவிப்பு மற்றும் ஊதா அறிவிப்பு என ஏழு வகையான அறிவிப்புகள் உள்ளன.
  • "ஒரு குற்றம் தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதற்காக" நீல வண்ண அறிவிப்பு வெளியிடப் படும்.
  • சிவப்பு நிற அறிவிப்பானது தேடப்பட்டு வரும் ஒரு நபரைக் கைது செய்வதற்காக வழங்கப் படுகின்றது.
  • சர்வதேச குற்றவியல் காவல்துறை அமைப்பு அல்லது சர்வதேசக் காவல் துறையானது 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் பிரான்சின் லியானில் அமைந்துள்ளது.
  • இது 1923 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் காவல்துறை ஆணையமாக உருவாக்கப் பட்டது. மேலும் 1956 ஆம் ஆண்டில் தன்னை சர்வதேசக் காவல்துறை என்று அழைக்கத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்