TNPSC Thervupettagam

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) விட்டு வெளியேறிய முதல் நாடாகிறது புருண்டி

October 29 , 2017 2582 days 841 0
  • உலகின் மோசமான குற்றச்சம்பவங்களுக்கு தீர்ப்பு வழங்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய முதல் நாடு புருண்டி ஆகும். கடந்த வருடம் மூன்று ஆப்ரிக்கா நாடுகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை விட்டு வெளியேறப் போவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரிடம் தெரிவித்திருந்தன.
  • வெளியேறும் முடிவெடுத்திருந்து ஒரு வருடம் ஆன நிலையில், மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் அதிகாரப் பூர்வமாக வெளியேறிய முதல் நாடு புருண்டி ஆகும்.
  • ஜனாதிபதி பியரி குருன்சிசா மூன்றாம் முறை ஆட்சிக்கால நீட்டிப்புக்கான தேர்தலில் வெற்றி பெற்றார்.இது குறித்த அறிவிப்பை ஏப்ரல் 2015ல் வெளியிட்டிருந்தார். அது தொடங்கி புருண்டி நாடு தொடர்ந்து கொந்தளிப்புகளை சந்தித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்