ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பு (UNWTO) ஆனது சமீபத்தில் சர்வதேசச் சுற்றுலா குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும் என்ற நிலையில் இத்துறையானது அதன் ஏற்றுமதி வருவாயில் 2.6 டிரில்லியன் டாலர் மதிப்பினை இழந்தது.
2019 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனாக இருந்த, சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் வருகை அல்லது ஒருநாள் பார்வையாளர்களின் வருகையானது 2020 ஆம் ஆண்டில் 400 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இது ஒரு வருடத்தில் பதிவான 72 சதவீத வீழ்ச்சியாகும்.
2020 ஆம் ஆண்டில் பதிவான ஏற்றுமதி வருவாய் ஆனது பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளில் 62 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், 1.1 டிரில்லியன் டாலர் இழப்பு என்பது அதில் பதிவாகியுள்ளது.
இது அந்த ஆண்டு சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட உலகளாவிய இழப்பில் 44 சதவீதமாகும்.
சர்வதேசச் சுற்றுலா துறையின் வருவாய் ஆனது 2019 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவிய ஏற்றுமதியில் ஏழு சதவீத பங்கினை கொண்டுள்ளது.
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த விகிதம் மூன்று சதவீதமாகக் குறைந்து உள்ளது.
சர்வதேசச் சுற்றுலா ஆனது 2021 ஆம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து 456 மில்லியன் வருகையை எட்டியுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டில் பதிவானதை விட 49 மில்லியன் அதிகமாக இருந்தாலும், 2019 ஆம் ஆண்டின் பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளை விட (1,465 மில்லியன்) 69 சதவீதம் குறைவாக உள்ளது.
பெருந்தொற்றின் காரணமாக, 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக இருந்த சுற்றுலா நேரடி மொத்த உள்நாட்டு உற்பத்தி (TDGDP) அளவில் மதிப்பிடப்படும் சுற்றுலாத் துறையின் பொருளாதாரப் பங்களிப்பு ஆனது, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.