TNPSC Thervupettagam

சர்வதேசப் பனிச் சிறுத்தை தினம் - அக்டோபர் 23

October 28 , 2024 26 days 95 0
  • பிஷ்கெக் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இந்த தினமானது அனுசரிக்கப்படத் தொடங்கியது.
  • பனிச்சிறுத்தையானது (பாந்தெரா யுனிசியா) கடுமையான, உயரமான சூழல்களில் வளர்கிறது.
  • இவை மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் மலைப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவை.
  • இவை பொதுவாக மலைத் தொடர்களில் 9,800 முதல் 17,000 அடி உயரத்தில் காணப் படுகின்றன.
  • பனிச் சிறுத்தையானது உலகின் மிகவும் மலைப் பாங்கான 12 நாடுகளில் மட்டும் வாழ்கின்றன.
  • அவை ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா, மங்கோலியா, நேபாளம், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியனவாகும்.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்