TNPSC Thervupettagam

சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழு

December 7 , 2023 354 days 227 0
  • மும்பையில் அமைந்துள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழுவின் (ICAC) அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் 81வது முழுமையான அமர்வுகளின் கூட்டமானது ஜவுளி அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் யாதெனில் "பருத்தி மதிப்புச் சங்கிலி: உலகளாவிய செழுமைக்கான உள்ளூர் கண்டுபிடிப்புகள்".
  • ICAC அமைப்பின் முழுமையான கூட்ட அமர்வுகளானது ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பு நாடுகளில் நடத்தப்படுகிறது.
  • இது பருத்தி உற்பத்தி, நுகர்வு மற்றும் வர்த்தகம் செய்யும் நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் சங்கமாகும்.
  • இது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள வாஷிங்டனைத் தலைமையகமாக கொண்டு 1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழுவின் (ICAC) உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • இதன் 28 உறுப்பினர்களில் பெரும்பாலானவை உலகளவில் அதிக பருத்தியினை உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
  • ஆனால் உலகளவில் அதிகப் பருத்தியினை உற்பத்தி செய்யும் 10 பெரிய உற்பத்தியாளர் நாடுகளில் இரண்டு (சீனா மற்றும் துர்க்மெனிஸ்தான்) பெரிய உற்பத்தியாளர் நாடுகளானது இதில் உறுப்பினர்களாக  சேரவில்லை.
  • பருத்தி சாகுபடி செய்வதில் உலகி இந்தியா மிகப்பெரிய பரப்பளவினைக் கொண்டுள்ளதோடு, பருத்தி உற்பத்தியிலும் உலகளவில் இரண்டாவது இடத்தினை வகிக்கின்றது.
  • குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகியவை அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யும் முக்கியமான மாநிலங்களாகும்.
  • இம்மாநிலங்கள் நாட்டின் பருத்தி உற்பத்தியில் 65 சதவீதத்தினை உற்பத்தி செய்கின்றன.
  • கஸ்தூரி பருத்தி பாரத் என்பது இந்தியாவின் மதிப்புமிக்க  தர அடையாளத்தினைப் பெற்ற பருத்தி  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்