வருடாந்திர சர்வதேசப் பாராளுமன்றங்கள் தினத்தை அனுசரிப்பதற்காக ஐக்கிய நாடுகளினால் ஜூன் 30 என்ற தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசியத் திட்டங்கள் மற்றும் உத்திகளில் பாராளுமன்றங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இத்தினம் பறை சாற்றப்பட்டது.
இந்த நாளில் 1889 ஆம் ஆண்டில் பாராளுமன்றங்களுக்கான உலக அமைப்பான பாராளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் (Inter Parliamentary Union- IPU) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இத்தினமானது பாராளுமன்றங்களையும் உலகம் முழுவதும் வாழும் மக்களின் தினசரி வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாராளுமன்ற அமைப்பால் மேற்கொள்ளப்படும் வழிகளையும் அனுசரிக்கின்றது.
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பிரச்சினை அதிகம் ஏற்படும் நாடுகளில் மக்களுக்கான அரசின் செயல்பாடுகள் மற்றும் அமைதி ஆகியவற்றை இந்தப் பாராளுமன்றங்களால் கொண்டு வர முடியும்.