உலகளவில் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் அவர்களின் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
இது பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்மறைக் கருத்துகள் மற்றும் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூகத்தில் வாழ்கின்ற மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட மற்றும் மதிப்பு மிக்கப் பிரிவினருக்கு மரியாதை வழங்கும் விதமாக இந்த நாளானது 1976 ஆம் ஆண்டு முதல் நினைவு கூரப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நீதிக்கான அணுகல்" என்பதாகும்.