முதன்முறையாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேசப் பிரதிநிதிகள் தினத்தை அனுசரித்தது.
ஐக்கிய நாடுகள் நிறுவதலுக்கு காரணமான ஒரு நிகழ்வான சான் பிரான்சிஸ்கோ கருத்தரங்கின் 75வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இத்தினமானது கொண்டாடப் படுகின்றது.
1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று, முதன்முறையாக 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஒன்று கூடினர்.
இது சர்வதேச அமைப்பு மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு என்று அழைக்கப் படுகின்றது.
இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் உலகப் போரிற்குப் பின் உலக அமைதியை மீட்டெடுத்தல் மற்றும் சர்வதேச விதிகளை விதித்தலுக்காக ஒன்றிணைதல் என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சாசனமானது இக்கருத்தரங்கு நடைபெற்று 2 மாதங்களுக்கு பின்பு (1945, ஜுன் 25) வடிவமைக்கப் பட்டது.