TNPSC Thervupettagam
December 18 , 2019 1684 days 537 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 36வது சர்வதேசப் புவியியல் மாநாட்டை (International Geological Congress - IGC) நடத்த இந்தியா தயாராகி வருகின்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, ‘புவி அறிவியல்: ஒரு நீடித்த வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல்’ என்பதாகும்.
  • இந்த நிகழ்வை இரண்டு முறை நடத்திய ஒரே ஆசிய நாடு இந்தியா மட்டுமேயாகும்.
  • 1964 ஆம் ஆண்டில், இந்தியா முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்தியது.
  • இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான தலைமை நிறுவனம் இந்தியப் புவியியல் ஆய்வு மையமாகும்.

சர்வதேச புவியியல் மாநாடு பற்றி

  • இது புவிசார் அறிவியல் ஒலிம்பிக் என்று பிரபலமாக விவரிக்கப் படுகின்றது.
  • இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகளாவிய புவி அறிவியல் மாநாடாகும். மேலும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 5000-6000 புவியியலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்