இது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப் பட்டது.
உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் சில தனித்துவமான சவால்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் அதிகாரத்தை மேம்படுத்தவும் வேண்டி இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவமின்மை, குழந்தைத் திருமணம் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அவர்களுக்கு உள்ள வரையறுக்கப்பட்ட அணுகல் போன்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Girls’ vision for the future" என்பதாகும்.
யுனெஸ்கோ அமைப்பானது 1979 ஆம் ஆண்டினைச் சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவித்தது.