புவியில் உள்ள ஏழு பெரும்பூனை இனங்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியைத் தொடங்கியது.
புலி, சிங்கம், சிறுத்தை, பனிச் சிறுத்தை, சிவிங்கிப் புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு பெரும்பூனை இனங்களைப் பாதுகாப்பதில் இந்தத் திட்டம் பெரும் கவனம் செலுத்துகிறது.
ஏழு பெரும்பூனை இனங்களின் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டுள்ள 97 நாடுகளைச் சென்றடைவதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.