TNPSC Thervupettagam

சர்வதேசப் பேரிடர் அபாயக் குறைப்பு தினம் - அக்டோபர் 13

October 13 , 2019 1813 days 522 0
  • அக்டோபர் 13 ஆம் தேதியன்று சர்வதேசப் பேரிடர் அபாயக் குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
  • ஆபத்து குறித்து அறிதல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றை நோக்கிய ஒரு உலகளாவியக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைச் சேவைகளை சீர்குலைத்தல் ஆகியவற்றிற்கான பேரிடர் சேதத்தைக் குறைத்தல்” என்பதாகும்.
  • 1989 ஆம் ஆண்டில், பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சர்வதேச தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் நிறுவப்பட்டது.
  • செண்டாய்க் கட்டமைப்பின் (2015 - 2030) ஏழு இலக்குகளை மையமாகக் கொண்ட பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினால் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “செண்டாய் ஏழு” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டுப் பதிப்பு தொடர்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்