TNPSC Thervupettagam

சர்வதேசப் பொம்மைகள் கண்காட்சி 2024

July 7 , 2024 12 days 106 0
  • புதுதில்லியில் நடைபெறும் நான்கு நாள் சர்வதேசப் பொம்மை கண்காட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாங்குபவர்களும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.
  • இந்த 15வது சர்வதேசப் பொம்மைகள் கண்காட்சி 2024 தெற்காசியாவின் மிகப்பெரிய கண்காட்சியாகும்.
  • நாட்டின் பொம்மை ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டில் 153.89 மில்லியன் டாலரில் இருந்து 2023-24ல் 152.34 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளாவிய சந்தை சுமார் 60.3 பில்லியன் டாலர் மதிப்புள்ளப் பொம்மைகளை இறக்குமதி செய்தது.
  • இந்தச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும், சீனா 48.3 பில்லியன் டாலர் மதிப்புள்ளப் பொம்மைகளை ஏற்றுமதி செய்து, உலக ஏற்றுமதியில் 80 சதவீத பங்கைக் கொண்டு உள்ளது.
  • உலகப் பொம்மை ஏற்றுமதிச் சந்தையில் இந்தியாவின் பங்கு என்பது சுமார் 0.3 சதவீதம் மட்டுமே ஆகும் என்பதோடு மேலும் இந்தியா ஏற்றுமதியில் 27வது இடத்தில் உள்ளது.
  • பொம்மை இறக்குமதியில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இந்தியா 61வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்