TNPSC Thervupettagam

சர்வதேசப் போக்குவரத்து மன்றம்

August 23 , 2022 700 days 307 0
  • இந்தியப் போக்குவரத்துத் துறையில் சர்வதேசப் போக்குவரத்து மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சர்வதேசப் போக்குவரத்து மன்றம் 64 உறுப்பு நாடுகளைக் கொண்ட வகையில் ஒரு அரசுகளுக்கு இடையேயான ஒரு அமைப்பாகும்.
  • இது போக்குவரத்துக் கொள்கைக்கான சிந்தனைக் குழுவாகச் செயல்படுவதோடு போக்குவரத்து அமைச்சர்களுக்கான ஒரு வருடாந்திர உச்சி மாநாட்டையும் ஏற்பாடு செய்கிறது.
  • அனைத்துப் போக்குவரத்து முறைகளையும் உள்ளடக்கிய ஒரே உலகளாவிய அமைப்பாக சர்வதேசப் போக்குவரத்து மன்றம் உள்ளது.
  • சர்வதேசப் போக்குவரத்து மன்றமானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் நிர்வாக ரீதியாக ஒருங்கிணைக்கப் பட்டிருந்தாலும் அது அரசியல் ரீதியாக தன்னாட்சி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்