சர்வதேச அகிம்சை தினம் - அக்டோபர் 2
October 5 , 2019
1880 days
1427
- மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
- இந்தத் தினத்தை அனுசரிப்பதற்கான கருத்தானது ஈரானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி என்பவரால் 2004 ஆம் ஆண்டில் முன்மொழியப் பட்டது.
- 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக நிறுவ வாக்களித்தது.
- இந்தத் தினமானது அகிம்சை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய கொள்கைகளைப் பரப்புவதற்காக கொண்டாடப் படுகின்றது.
Post Views:
1427