TNPSC Thervupettagam

சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் – டிசம்பர் 2

December 3 , 2017 2547 days 1215 0
  • உலக மக்களிடையே அடிமைத்தனத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 2ஆம் தேதி சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  • 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி அன்று ஆள்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் பிறர் விபச்சாரத்திற்குட்படுத்தப்பட்டு சுரண்டப்படுவதை தடுப்பதற்கான  உடன்படிக்கை ஐ.நா.சபையின் பொது அவையில்  ஏற்றுக் கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக (United nations conventions for the suppression of the Traffic in person and of the exploitations of the prostitution of others) இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
அடிமைத்தன குறியீடு
  • ஆண்டுதோறும் வால்க் ப்ரீ பவுண்டேஷன் எனும் அமைப்பால் உலக அடிமைத் தன குறியீடு (Global Slavery index) வெளியிடப்படுகின்றது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீட்டில் இந்தியா உலகின் 167 நாடுகளில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த குறியீட்டின்படி 2016-ல் இந்தியாவில் 18.3 மில்லியன் அளவிற்கு அடிமைத்தனத்தில் சிக்கிய மக்கள் உள்ளனர்.
நவீன அடிமைத்துவத்தின் உலகளாவிய மதிப்பீடுகள்
  • வால்க் ப்ரி பவுண்டேஷன் அமைப்பானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International labour Organisation) சார்பாக  “நவீன அடிமைத்துவத்தின் உலகளாவிய மதிப்பீடுகள்“ (Global Estimates of modern slavery) என்ற அறிக்கையை வெளியிடுகின்றது.
  • இவற்றில் நாடுகள் வாரியான மதிப்பீடுகள் வெளியிடப்படுவதில்லை.
  • இந்த அறிக்கையின் படி, உலகம் முழுவதும் 40.3 மில்லியன் அளவிற்கு நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்