TNPSC Thervupettagam

சர்வதேச அணை பாதுகாப்பு கருத்தரங்கு

January 24 , 2018 2499 days 808 0
  • சர்வதேச அணை பாதுகாப்பு குறித்த முதல் கருத்தரங்கை ஜனவரி மாதத்தின் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் இந்தியா நடத்தியுள்ளது.
  • கேரள மநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய தண்ணீர் ஆணையம் (Central Water Commission) இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்துள்ளது.
  • அணை பாதுகாப்பு புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Dam Safety Rehabilitation and Improvement Project – DRIP) பங்கெடுத்துள்ள உறுப்பு நாடுகளில் அணைகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படவிருக்கும் ஓர் வருடாந்திர கருத்தரங்கே இந்த சர்வதேச அணை பாதுகாப்பு கருத்தரங்காகும்.
  • அணைகளுடைய பாதுகாப்பு குறித்து இக்கருத்தரங்கின் விவாதங்களிலிருந்து பெறப்படும் முக்கிய பரிந்துரைகளானது அவற்றின் அமல்பாட்டிற்காக, DRIP திட்டத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் அவற்றின் கொள்கை வகுப்பாளர்களுக்கு அனுப்பப்படும்.

தர்மா - செயலி

  • இக்கருத்தரங்கில் அணை ஆரோக்கியம் மற்றும் புனர்வாழ்வு கண்காணிப்பு பயன்பாடு எனும் விரிபொருள் உடைய தர்மா எனப்படும் (DHARMA – Dam Health and Rehabilitation Monitoring Application) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • திறன் மிகுந்த முறையில், அணைகளோடு தொடர்புடைய அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் வலைக் கருவியே (Web Tool) தர்மா செயலியாகும்.
  • நாட்டிலுள்ள அணைகளின் அதிகாரப்பூர்வ சொத்துக்களை (Authentic Assets) ஆவணமிடவும், பெரும் அணைகளின் ஆரோக்கியத்தோடு தொடர்புடைய தகவல்களை ஆவணமிடவும் இந்த செயலி உதவிட வல்லதால், தேவை அடிப்படையிலான புனர்வாழ்வமைப்பை உறுதி செய்ய போதுமான செயற் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதனால் வழியுண்டாகும்.

DRIP

  • இந்தியாவில், DRIP திட்டமானது உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றது.
  • மத்திய நீர் ஆணையத்தின் (Central Water Commission) மத்திய அணை பாதுகாப்பு நிறுவனம் (Central Dam Safety Organisation) இத்திட்டத்தின் அமலாக்கத்தை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுகின்றது.

DRIP திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

  • 7 வெவ்வேறு இந்திய மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 223 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை நீடித்த முறையில் அதிகரித்தல்.
  • தேசிய அளவிலும், மாநில அளவிலும் அணை பாதுகாப்பில் பங்கெடுத்துள்ள இந்திய மாநிலங்களில் அணை பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அணை பாதுகாப்பு நிறுவன அமைப்பை (Dam Safety Institutional Setup) வலுப்படுத்துதல்.
  • DRIP திட்டத்தின் ஏழு இந்திய மாநிலங்களாவன:
    • தமிழ்நாடு
    • ஜார்க்கண்ட்
    • கர்நாடகா
    • கேரளா
    • மத்தியப் பிரதேசம்
    • ஒடிஸா
    • உத்தரகண்ட்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்