TNPSC Thervupettagam

சர்வதேச அன்னைப் புவித் தினம் – ஏப்ரல் 22

April 23 , 2020 1680 days 485 0
  • இது 1970 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 
  • இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • இத்தினமானது இந்த ஆண்டில் “காலநிலை நடவடிக்கை” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப் பட்டது. 
  • இது உலகப் புவித் தின வலையமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
  • புவித் தின வலையமைப்பு என்பது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.
  • இந்த ஆண்டானது உலகப் புவித் தினத்தின் 50வது நிறைவு ஆண்டாகும்.
  • புவித் தினமானது அதன் 50வது நிறைவு தினத்தில் 8 மில்லியன் மக்களை “பூமியின் சவால் 2020” என்ற நிகழ்வில் பங்கு கொள்ள வைப்பதற்காக மக்கள்சார் அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை வழங்குகின்றது.
  • 2016 ஆம் ஆண்டு புவித் தினத்தன்று, புகழ்பெற்ற பாரிஸ் ஒப்பந்தமானது அமெரிக்கா, சீனா மற்றும் இதர 120 நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது. 
  • புவித் தினம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக அமெரிக்க மேல்சபை உறுப்பினரான கேலார்ட் நெல்சன் என்பவரால் துவக்கி வைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்