சில நேரங்களில் அதிகாரப் பூர்வமற்ற முறையில் உலக அமைதி தினம் என்று அழைக்கப்படுகின்ற சர்வதேச அமைதி தினமானது ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
1981 ஆம் ஆண்டில் அமைதிக் கலாச்சாரம் குறித்த ஐ.நா. தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் இத்தினமானது நிறுவப்பட்டது.
இந்த தினத்தை அனுசரிப்பதற்காக ஐ.நா. அமைதி மணி ஐ.நா.வின் தலைமையகத்தில் (நியூயார்க் நகரில்) ஒலிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவாக “அமைதிக்காக காலநிலை நடவடிக்கை” என்பதினை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் ஒப்பீட்டளவில் தனித்துவமானது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஆண்டு கருத்துருவானது போர், மோதல் அல்லது அமைதி ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.