ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி சர்வதேச அருங்காட்சியகத் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினத்தின் நோக்கம் கலாச்சாரப் பரிமாற்றங்களை ஏற்படுத்தும் அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
1977 ஆம் ஆண்டில் சர்வதேச அருங்காட்சியகங்கள் ஆணையமானது முதலாவது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தை ஒருங்கிணைத்தது.
2019 ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருத்துருவானது, “அருங்காட்சியகங்கள் கலாச்சார மையங்களாகும் : மரபின் எதிர்காலம்” என்பதாகும்.
1753 ஆம் ஆண்டில் உலகின் முதலாவது பொது அருங்காட்சியகம் பிரிட்டனில் தொடங்கப்பட்டது.
1851 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னையில் உள்ள அரசாங்க அருங்காட்சியகம் அல்லது மதராஸ் அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாகும்.