US Chamber of Commerce அமைப்பினால் வெளியிடப்படும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீட்டின் 2018-ஆம் ஆண்டிற்கான பதிப்பில் 50 நாடுகளுள் இந்தியா 44-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வாண்டிற்கான குறியீட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
ஜெர்மன், ஜப்பான், சுவீடன் ஆகியவை அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.
அறிவுசார் சொத்துரிமை குறியீடானது 50 நாடுகளில் நிலவும் அறிவுசார் சொத்துரிமை சூழலை மதிப்பிடுவதோடு, நாடுகளின் சர்வதேச ஒப்பந்தங்கள், பதிப்புரிமை, காப்புரிமை, தொழிற் குறியீடுகள், வர்த்தக இரகசியங்கள் மற்றும் ஒப்பந்த அமலாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்துகின்றன.
இக்குறியீட்டின் கடந்த ஆண்டிற்கான பதிப்பில் இந்தியா 43-வது இடத்தைப் பிடித்து இருந்தது.
தரவரிசையில் பின்னடைந்திருப்பினும், அளவுருக்களின் மீதான மதிப்பீட்டின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமான மதிப்பெண் சதவீதத்தை இந்தியா பெற்றுள்ளது.