TNPSC Thervupettagam

சர்வதேச ஆயுத பரிமாற்றங்களின் போக்குகள் - 2018

March 13 , 2019 1990 days 560 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI - The Stockholm International Peace Research Institute) 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆயுதப் பரிமாற்றங்களின் போக்குகளுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ஆயுத இறக்குமதியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. உலகின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.5 சதவிகிதமாகும்.
  • 2001 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போர் விமானங்கள் மற்றும் 2008 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டிடமிருந்து வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து உரிமத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் வழங்குதலில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்தியாவின் இறக்குமதி பகுதியாகக் குறைந்துள்ளது.
    • SIPRI என்பது முரண்பாடுகள், போர்த் தளவாடங்கள், ஆயுதக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆயுதங்களை அழித்தல் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக 1966 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தனிச் சுதந்திரமுடைய சர்வதேச நிறுவனமாகும்.
    • ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள இந்த நிறுவனமானது திறந்தவெளி ஆதாரங்கள், கொள்கையை உருவாக்குபவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகம் மற்றும் பொது நலனில் அக்கறையுள்ள பொது மக்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தகவல், பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்