மொராக்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து சர்வதேச ஆர்கானியா தினத்தினைக் கொண்டாடுகின்றன.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உள்ளூர் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் ஆர்கான் சுற்றுச்சூழல் அமைப்பின் நிலைத்தன்மை" என்பதாகும்.
சமூக மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையில் ஆர்கன் மரத்தின் பங்கினை முன்னிலைப் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொண்டாட்டமானது, ஆர்கான் மரத்தினை அந்த நாட்டினைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாக மேம்படுத்துவதற்காக மொராக்கோ நாட்டு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முன்னிலைப் படுத்துகிறது.
ஆர்கான் மரம் சார்ந்தத் தயாரிப்புகளுக்கான உலகின் முக்கிய ஒரு ஏற்றுமதியாளராக விளங்குவதால், ஆர்கான் மரங்கள் மொராக்கோ மற்றும் மொராக்கோ கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடத்தினைப் பெற்றுள்ளன.
மொராக்கோ நாட்டின் வருடாந்திர ஆர்கன் எண்ணெய் உற்பத்தி 4,000 முதல் 6,000 டன்கள் வரை இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பானது 2014 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் ஆர்கான் மரத்தினைச் சேர்த்தது.