TNPSC Thervupettagam

சர்வதேச ஆற்றல் மன்ற அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு

April 24 , 2018 2280 days 679 0
  • அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப்பிறகு ஆற்றல் நுகர்வில் உலக அளவில் மூன்றாவது பெரிய ஆற்றல் நுகர்வோரான    இந்தியா  16-வது சர்வதேச ஆற்றல் மன்றத்தின் (International Energy Forum - IEF) அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை அண்மையில்  புதுதில்லியில் நடத்தியுள்ளது.
  • இச்சந்திப்பு முறைப்படி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தியா சர்வதேச ஆற்றல் மன்ற அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை இரண்டாவது முறையாக நடத்தியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா 5-வது சர்வதேச ஆற்றல்மன்றத்தின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை 1996 ஆம் ஆண்டு கோவாவில் நடத்தியது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான இச்சந்திப்பின் கருத்துரு “உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பு மாற்றம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் எதிர்காலம்” (The Future of Global Energy Security: Transition, Technology, Trade and Investment) என்பதாகும்.
  • 42 நாடுகளைச் சேர்ந்த பெட்ரோலியத் துறை அமைச்சர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பானது சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் கூட்டுறவோடு இந்தியாவால் நடத்தப்பட்டுள்ளது.
  • இச்சந்திப்பானது அறிவாற்றல் மற்றும் அனுபவப்பகிர்வு ஆகியவற்றின் மூலமாக கொள்கைகள் மற்றும் முதலீட்டு முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்