TNPSC Thervupettagam

சர்வதேச ஆற்றல் முகமையின் அமைச்சரவை மாநாடு - 2017

November 10 , 2017 2600 days 842 0
  • சர்வதேச ஆற்றல் முகமையின் 2017-ம் ஆண்டிற்கான அமைச்சரவை மாநாடு சமீபத்தில் பாரிஸில் நடத்தப்பட்டது.
  • இதன் முதன்மையான நோக்கம் உலகின் ஆற்றல் தேவைக்கான சவால்களும் அதனை எப்படி சமாளிப்பது என்பதும் ஆகும்.
  • இந்த மாநாட்டில் இந்தியா இந்த முகமையோடும் அதன் முக்கிய உறுப்பினர்களான பிரேசில், சிலி, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளோடும் கூட்டு ஒத்துழைப்பு திட்டங்களில் கையெழுத்திட்டது.
  • 1973ம் ஆண்டின் எண்ணெய் பிரச்சினைக்குப் பிறகு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (Organisation for Economic Co-operation and Development) கட்டமைப்பின் அடிப்படையில் பாரிஸை மையமாகக் கொண்ட சுதந்திரமான அரசுகளுக்கிடையேயான அமைப்பு சர்வதேச ஆற்றல் முகமை ஆகும்.
  • இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது உறுப்பினரல்லாதவர்களுக்கும் குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கும் கொள்கை ஆலோசகராக செயல்படுகிறது.
  • இந்தியா சமீபத்தில் இந்த நிறுவனத்திற்கான தனது இணை உறுப்பினர் நிலையை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்