TNPSC Thervupettagam

சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் – மார்ச் 21

March 23 , 2020 1711 days 432 0
  • அனைத்து மனிதர்களும் பிறப்பின் போது சுதந்திரமாகவும் சமமான கண்ணியத்துடனும் உரிமையுடனும் உள்ளனர் என்றும் சமூகங்களின் வளர்ச்சி மற்றும் நலனில் இவர்கள் பங்கு கொள்ளும் திறன் கொண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூறியுள்ளது.
  • இந்த ஆண்டு இத்தினமானது ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப் பட்ட ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேசப் பத்தாண்டுகளில் இடைநிலை ஆய்வின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அங்கீகாரம், நீதி மற்றும் வளர்ச்சி ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேச பத்தாண்டுகளின் இடைநிலை மறு ஆய்வு” என்பதாகும்.
  • பின்னணி
  • 1960 ஆம் ஆண்டில் இத்தினத்தில் நிறவெறிச் சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் சர்ப்பிவில்லியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 69 மக்கள் கொல்லப் பட்டனர்.
  • 1966 ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பறைசாற்றும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இனப் பாகுபாட்டின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கான தனது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்காக சர்வதேசச் சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்