TNPSC Thervupettagam

சர்வதேச உழைப்பாளர்கள் தினம் - மே 1

May 3 , 2021 1215 days 454 0
  • மே தினமானது சர்வதேச உழைப்பாளர்கள் தினம் (அ) தொழிலாளர் தினம் எனவும் அழைக்கப் படுகிறது.
  • இத்தினமானது தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டினையும் கொண்டாடுவதோடு, பெரும்பாலான நாடுகளில் இத்தினமானது வருடாந்திரப் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் சிகாகோவும் மற்ற சில நகரங்களும் 1886 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று 8 மணி நேர வேலைநாள் கோரிக்கையினை முன் வைத்த வகையில் தொழிற்சங்கப் போராட்டங்களின் முக்கிய மையங்களாக இருந்தன.
  • 1889 ஆம் ஆண்டில் சர்வதேசப் பொதுவுடமை மாநாடானது ஹேமார்க்கெட் நிகழ்வின் நினைவாக மே 01 ஆம் தேதியினை உழைப்பாளர்களுக்கான சர்வதேச விடுமுறையாக (சர்வதேச உழைப்பாளர்கள் தினம்) கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.
  • இந்தியாவில் முதல் உழைப்பாளர் தினமானது 1923 ஆம் ஆண்டில் சிங்காரவேலு செட்டியினரால் ஆரம்பிக்கப் பட்ட லேபர் கிசான் கட்சியினால் சென்னையில் கடைபிடிக்கப் பட்டது.
  • இது தொழிலாளர் சங்க இயக்கத்தினால் (Labour Union Movement) தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்