TNPSC Thervupettagam

சர்வதேச ஊரக பெண்கள் தினம் – அக்டோபர் 15

October 15 , 2017 2468 days 848 0
  • கிராமப்புற குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும், கிராமப்புற வாழ்வாதாரத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதிலும் பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரிக்கும் விதத்தில்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச ஊரக பெண்கள் தினம் என கொண்டாடப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான ஊரக பெண்கள் தினத்தின் கருத்துரு- “காலநிலை–நெகிழ்ச்சியுடைய வேளாண்மையில் ஊரக பெண்கள் மற்றும் சிறுமிகளின் மேம்பாடு, பாலின சமத்துவம் போன்றவற்றிற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்”.
  • ஐநா பொது அவையால் சர்வதேச ஊரக பெண்கள் தினம் நிறுவப்பட்டு அக்டோபர் 15, 2008 அன்று முதன்முதலில் கடைபிடிக்கப்பட்டது.
  • ஐ.நா அவையின் கருத்துப்படி, வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, உணவு பாதுகாப்பை அடைதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றை இலக்காக கொண்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்கின் (SDG-Sustainable Development Goal) தொலை நோக்கு பார்வையை அடைய ஊரக பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஓர் கட்டாய முன் தேவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்