சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 09 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
ஊழல் பற்றியும் அதை எதிர்த்துப் போராட மக்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது கொண்டாடப் படுகின்றது.
இந்தத் தினமானது ஐ.நா பொதுச் சபையால் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த ஒப்பந்தமானது டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தினமானது உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Program - UNDP) மற்றும் போதைப் பொருள் & குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (United Nations Office on Drugs and Crime - UNODC) ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
இந்தத் தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகின்றது. இது 2030 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கைத் தலைமையாகக் கொண்டு ஊழலுக்கு எதிரான உலகளவிலான ஒரு போராட்டத்தை ஊக்குவிக்கின்றது.
2018-2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “ஊழலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்பதாகும்.