ஊழல் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகமெங்கிலும் டிசம்பர் 09 ஆம் நாள் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஊழல்களை திறம்பட தடுக்கவும் அதனை எதிர்த்துப் போராடவும் வேண்டி அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஐ.நா.வின் ஊழல் தடுப்பு உடன்படிக்கை (UN Convention Against Corruption-UNCAC) நிறைவேற்றப்பட்ட நாள் முதலாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
UNCAC ஆனது சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தக்கூடிய சர்வதேச அளவிலான முதலாவது ஊழல் எதிர்ப்புக் கருவியாகும். இது உலகளாவிய அளவில் ஊழலுக்கெதிராக தீர்வளிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
ஐ.நா.வானது, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP - United Nations Development Group) மற்றும் போதைப் பொருள்கள் & குற்றங்கள் மீதான ஐ.நா அலுவலகம் (UN Office on Drugs and Crimes -UNODC) ஆகியவற்றுடன் இணைந்து ஊழல் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உலகளாவிய அளவிலான “ஊழல் : நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு ஒரு தடை” எனும் பிரசாரத்தை உருவாக்கியுள்ளது.