TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் – டிசம்பர் 9

December 10 , 2017 2572 days 1169 0
  • ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 9ஆம் தேதி ஊழலைப் பற்றியும், அவற்றை எதிர்த்து போராடுவதற்கான வழிகளைப் பற்றியும் விழிப்புணர்வை உண்டாக்க ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  • 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தின் கருத்துரு “வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஊழலுக்கு எதிராக ஒன்று படுதல்“ (United against Corruption for development, Peace & Security).
  • 2003 அக்டோபர் 31ஆம் தேதி ஐ.நா.பொது அவை ஐ.நா.வின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
  • மேலும் இந்த உடன் படிக்கையின் உறுப்பினர் நாடுகளுக்கான செயலகமாக போதை பொருட்கள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா.அலுவலகத்தை (United Nations Office on Drugs and Crimes) நியமிக்கவும் பொதுச் செயலாளருக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.
  • ஐ.நா.மேம்பாட்டு திட்டம் (United Nations Development Programme) மற்றும் போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா.அலுவலகம் ஆகியவை ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கான முன்னணி சர்வதேச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்