TNPSC Thervupettagam

சர்வதேச எரிசக்தி முகமையின் சிறப்பு அறிக்கை

May 23 , 2021 1156 days 607 0
  • சர்வதேச எரிசக்தி முகமையால் “2050 ஆம் ஆண்டுக்குள் நிகர   சுழிய நிலை – உலகளாவிய ஆற்றல் துறைக்கான செயல்திட்டம்” ('Net Zero by 2050 - A Roadmap for the Global Energy Sector') எனும் ஒரு அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய நிலையை எவ்வாறு அடைவது என்பதற்கான உலகின் முதல் விரிவான ஆய்வு அறிக்கை இதுவாகும்.
  • நிலையான மற்றும் மலிவான ஆற்றல் வழங்கீடுகளை உறுதி செய்தல், உலகளவில் ஆற்றலை பெறும் வாய்ப்பினை வழங்குதல் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியை செயல்பெறச் செய்தல் போன்றவற்றை அந்த நிலை வழங்குவதை உறுதி செய்திடும்.
  • புதைபடிம எரிபொருட்களுக்குப் பதிலாக சூரிய ஆற்றல் மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத் தக்க ஆற்றல்களினால் நிறைந்த தூய்மையான, செயல்மிக்க மற்றும் நெகிழ்திறனுடைய ஆற்றல் பொருளாதாரத்தினை உருவாக்குவதற்கான ஒரு செலவு குறைந்த பொருளாதார ரீதியில் உற்பத்தித் திறன் மிகுந்த ஒரு செயல்திட்டத்தை இது முன்வைக்கிறது.
  • மேலும் நிகர சுழிய நிலையை அடைவதில் உயிரி ஆற்றல், கார்பன் உமிழ்வைக் கைப்பற்றுதல் மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள் ஆகியவற்றின் பங்கு போன்ற முக்கிய நிச்சயமற்ற நிலைமைகளையும் இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்