TNPSC Thervupettagam

சர்வதேச எரிசக்தி முகமையின் முக்கிய கனிமங்கள் சந்தை மதிப்பாய்வு 2023

October 13 , 2023 280 days 249 0
  • சர்வதேச எரிசக்தி முகமையின் முதலாவது முக்கியக் கனிமங்கள் மற்றும் தூய்மையான ஆற்றல் உச்சி மாநாடு ஆனது பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்றது.
  • சர்வதேச எரிசக்தி முகமையின் 2023 ஆம் ஆண்டு முக்கியக் கனிமங்கள் சந்தை மதிப்பாய்வு அறிக்கையானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.
  • முக்கியமான கனிமங்களுக்கான சந்தை மதிப்பானது, முந்தைய ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 320 பில்லியன் டாலர்களை எட்டி உள்ளது.
  • முக்கியக் கனிமங்களில் தாமிரம், லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகியவை அடங்கும்.
  • இவை வேகமாக வளர்ந்து வரும் தூய்மையான ஆற்றல் தொழில்நுட்பங்களில் இன்றியமையாத கூறுகளாக உள்ளன.
  • 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், எரிசக்தித் துறையில் லித்தியத்திற்கான தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
  • கோபால்ட் கனிமத்திற்கான தேவை 70 சதவீதமும் நிக்கல் கனிமத்திற்கான தேவை 40 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்