TNPSC Thervupettagam

சர்வதேச எரிசக்தி முகமை 2023 ஆம் ஆண்டு இடைக் கால எண்ணெய்ச் சந்தை அறிக்கை

July 20 , 2023 365 days 219 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவுடன் (PPAC) இணைந்து  2023 ஆம் ஆண்டின் இடைக் கால எண்ணெய்ச் சந்தை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, சர்வதேச எரிசக்தி முகமை எண்ணெய் 2023 – 2028 ஆம் ஆண்டிற்கான வழங்கீடு மற்றும் தேவை மாற்றம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்டு உள்ளது.
  • 2028 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளின் எண்ணெய் தேவையானது மந்தநிலையைக் காணும் என்றும், எண்ணெய்த் தேவைகள் நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது
  • ஆனால் பெட்ரோலிய வேதியியல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகள் அதிகப் படியான எண்ணெய்த் தேவைக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு போக்குவரத்து துறைக்கான எண்ணெய் நுகர்வு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2028 ஆம் ஆண்டிற்குள் புதிய திரவ எரிபொருள் விநியோக உயர்வில் உயிரி எரிபொருள்கள் 10% பங்கினைக் கொண்டிருக்கும் என்று இந்த அறிக்கை குறிப்பிடச் செய்கிறது.
  • 2022 ஆம் ஆண்டிலிருந்து 2028 ஆம் ஆண்டிற்குள் உயிரி எரிபொருள் உற்பத்தியானது ஒரு தினத்திற்குக் கிட்டத்தட்ட 600 பீப்பாய்களாக உயரும்.
  • இந்த அதிகரிப்பில் பிரேசில், இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பங்கு 70% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்