கல்வியறிவுப் பிரச்சினை என்பது ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மற்றும் ஐ.நா.வின் 2030 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சிக்கானப் பணி நிரலின் முக்கிய அங்கமாகும்.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு 4 ஆனது அனைத்து இளைஞர்களும் கல்வியறிவு மற்றும் எண்ணறிவை அடைவதை தனது இலக்குகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த திறன்கள் இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
சர்வதேச எழுத்தறிவு நாள் 2019 என்பது 2019 ஆம் ஆண்டின் சர்வதேசப் பூர்வகுடி மொழிகளுக்கான ஆண்டுக் கொண்டாட்டங்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
சிறப்புத் தேவைகள் கல்வி குறித்த உலக மாநாட்டின் 25வது ஆண்டு விழா தற்பொழுது கொண்டாடப்படுகின்றது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வி குறித்த சலமன்கா அறிக்கையானது இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச எழுத்தறிவு தினம் 2019 ஆனது ‘கல்வியறிவு மற்றும் பன்மொழியியல்” ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்த விருக்கின்றது.
செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேசக் கல்வியறிவு தினமாக யுனெஸ்கோ தனது 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 14வது அமர்வில் அறிவித்தது.
இது முதல் முறையாக 1967 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.