1953 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தினைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறிய தினத்தினை இந்த நாள் நினைவு படுத்துகிறது.
டென்சிங் நோர்கே, தனது 7வது முயற்சியில் தான் இச்சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
இறுதியாக டென்சிங்கின் பிறந்த நாளான 1953 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதியன்று எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.
எட்மண்ட் ஹிலாரி 2008 ஆம் ஆண்டில் உயிரிழந்ததையடுத்து இந்த நாள் நிகழ்கால நடைமுறைக்கு வந்தது.
நேபாள நாட்டினரால் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் நில அளவையாளராக இருந்த சர் ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டது.
திபெத்தில், இதற்கு சோமோலுங்மா அல்லது புனித தாய் என்று பெயர் வழங்கப் பட்டு உள்ளது.