சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்புப் படையினர் தினம் – மே 29
May 30 , 2020 1644 days 496 0
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அமைதி காக்கும் பணியில் பெண்கள் : அமைதிக்கான ஒரு வழி” என்பதாகும்.
இது பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1325 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் 20வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க உதவுகின்றது.
1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் 29 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது குறைந்த எண்ணிக்கையிலான ஐ.நா. ராணுவக் கண்காணிப்பாளர்களை மத்தியக் கிழக்கில் பணியில் அமர்த்த அனுமதி வழங்கி அதன் மூலம் முதலாவது ஐ.நா. அமைதிப் படைத் திட்டமானது ஏற்படுத்தப் பட்டது.
ஒவ்வொரு அமைதி காக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்புச் சபையினால் ஒப்புதல் அளிக்கப் பட வேண்டும்.
ஐ.நா. அமைதிப் படையினர் நீலத் தொப்பியினர் அல்லது நீலத் தலைக் கவசத்தினர் என்று அழைக்கப் படுகின்றனர்.