TNPSC Thervupettagam

சர்வதேச ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் தினம் – மே 29

May 29 , 2019 2008 days 586 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று சர்வதேச ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது ஐ,நா.வின் அமைதிக் காப்புப் பணிகளுக்கு மதிப்பிட இயலாத பங்களிப்புகளை அளித்த சீருடை மற்றும் குடிமக்கள் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
  • இது 1948 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கீழ் பணியாற்றி உயிரிழந்த 3800க்கும் மேற்பட்ட அமைதிக் காப்பு வீரர்களைக் கௌரவிக்கின்றது
  • 1948 ஆம் ஆண்டு மே 29 அன்று முதலாவது ஐ,நா. அமைதிக் காப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
  • இது இஸ்ரேல் மற்றும் அதன் அண்மையில் உள்ள அரபு நாடுகளுக்கிடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டது.
  • 2003 ஆம் ஆண்டு முதல் இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
தொடரும் பொருந்துமை
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “குடிமக்களைப் பாதுகாத்தல், அமைதியைப் பாதுகாத்தல்” என்பதாகும்.
  • குடிமக்களின் பாதுகாப்பானது ஐ,நா.வின் அமைதிக் காப்பின் மையமாக விளங்குகின்றது.
  • குடிமக்களைப் பாதுகாப்பதற்காக 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஐ,நா. அமைதிக் காப்பு வீரர்கள் ஏறக்குறைய 8 நாடுகளில் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். அந்த நாடுகளாவன.
அபேய் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
டார்பர் தெற்கு சூடான்
லெபனான் காங்கோ மக்களாட்சிக் குடியரசு
மாலி ஹைத்தி
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்