TNPSC Thervupettagam

சர்வதேச ஐ.நா. அமைதி காப்பாளர்கள் தினம் - மே 29

May 29 , 2018 2371 days 692 0
  • ஐக்கிய நாடுகளின் பொது அவை, தனது 57/129 என்ற எண் கொண்ட தீர்மானத்தின் மூலம் மே 29ம் தேதியை சர்வதேச ஐக்கியநாடுகளின் அமைதி காப்பாளர்களின் தினமாக அங்கீகாரமளித்தது.

  • 1948ம் ஆண்டு இதே தினத்தில் UNTSO அல்லது United Nations Truce Supervision Organization எனப்படும் ஐக்கிய நாடுகள் இடைக்கால அமைதி மேற்பார்வை அமைப்பு முதல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியை பாலஸ்தீனத்தில் ஆரம்பித்தது.
  • இந்த மேற்பார்வை 1948ம் ஆண்டு நடந்த அரேபிய இஸ்ரேல் யுத்தத்திற்கு பிறகான போர் நிறுத்தத்தை கண்காணித்திட ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த தினம் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் தினமாக, உக்ரேனிய அமைதி காக்கும் சங்கமும் உக்ரேனிய அரசும் ஐக்கிய நாடுகள் பொது அவைக்கு அலுவல்பூர்வமாக வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இது முதலில் 2003ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
  • 2018ம் ஆண்டிற்கான சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் தினத்தின் கருத்துரு ‘சேவை மற்றும் தியாகத்தின் 70 வருடங்கள்’.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்