உலக வங்கியானது அடிப்படை ஆண்டு 2017ற்கான புதிய வாங்கும் சக்திச் சமநிலையை (PPPs - Purchasing Power Parities) வெளியிட்டுள்ளது.
இது உலகப் பொருளாதார நாடுகளுக்கிடையே வாழ்வாதாரச் செலவின வேறுபாடுகளைச் சரிசெய்யும் ICP-ன் (International Comparison Program) கீழ் உள்ளது.
ICP என்பது ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு மிகப்பெரிய உலகளாவிய தரவுச் சேகரிப்பு முன்னெடுப்பாகும்.
இந்திய ரூபாயின் PPP மதிப்பு ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP – Gross Domestic Product), 2017 ஆம் ஆண்டில் 1 டாலருக்கு நிகராக 20.65 ஆக உள்ளது. இது 2011 ஆம் ஆண்டில் 15.55 ஆக இருந்தது.
இந்தியாவின் நிலை
2017 ஆம் ஆண்டில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நிலையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. இது PPP-ன் அடிப்படையில் உலகின் GDPயில் 6.7% (உலக அளவில் $ 119,547 பில்லியன் என்ற மதிப்பில் இந்தியாவின் மதிப்பு $ 8,051 பில்லியன்) என்ற அளவைக் கொண்டுள்ளது.
சீனா 16.4%யும் அமெரிக்கா 16.3%யும் கொண்டுள்ளன.
மேலும் இந்தியாவானது PPP-ன் உலகளாவிய அசல் தனிநபர் நுகர்வு மற்றும் உலகளாவிய நிகர மூலதன உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் விளங்குகின்றது.
PPP பற்றி
ஒரு நாட்டின் நாணயமானது இரு நாடுகளிலும் (பல நாடுகளிலும்) ஒரே அளவுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை வாங்குவதற்காக மற்றொரு நாட்டின் நாணயமாக மாற்றப்படும் விகிதம் என்று வரையறுக்கப்படுகின்றது.