உலகம் முழுவதும் ஜூன் 23 அன்று சர்வதேச ஒலிம்பிக் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் உலகம் முழுவதும் விளையாட்டுகளில் பெருந்திரளான பங்கெடுப்புகளை ஊக்குவிப்பதையும் நேர்மையான விளையாட்டு, ஒற்றுமை, மரியாதை மற்றும் விளையாட்டுத் திறன் ஆகிய ஒலிம்பிக் குறிக்கோள்களைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1894 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று, ஒலிம்பிக் விளையாட்டுகளை உயிரூட்டுவதற்கு பியரி டி கவுபெர்ட்டின் என்பவரின் பரிந்துரைக்கு ஆதரவளிப்பதற்காக 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரான்சின் பாரிஸ் நகரில் ஒன்று கூடினர்.
இவர்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுவை (IOC - International Olympic committee) அமைத்தனர்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று பாரீஸில் IOC உருவாக்கியதை அனுசரிப்பதற்காக ஒலிம்பிக் தினம் என்ற கருத்தாக்கத்திற்கு IOC ஒப்புதல் வழங்கியுள்ளது.