1960 ஆம் ஆண்டில் தியோடர் மைமன் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் செயல்பாட்டின் வெற்றியின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இத்தினமானது அறிவியல், கலாச்சாரம் மற்றும் நிலையான மேம்பாடு உள்ளிட்ட நமது வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஒளியின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்காக யுனெஸ்கோ அமைப்பினால் நிறுவப்பட்டது.
யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச அடிப்படை அறிவியல் திட்ட அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இந்தத் தினத்திற்கான ஒரு கொண்டாட்டத்தினை மேற் கொள்கிறது.