சர்வதேச கடன் அறிக்கை 2022 உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
துணை-சஹாரா ஆப்பிரிக்கா பகுதியில் (SSA) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கடன் 2020 ஆம் ஆண்டில் $702 பில்லியனில் இருந்து 2021 ஆம் ஆண்டில் $789 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இது 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிராந்தியத்தின் அதிக கடன் சுமையாகும்.
2010 ஆம் ஆண்டில், இந்தப் பிராந்தியத்தின் கடன் சுமார் 305 பில்லியன் டாலர்களாக இருந்தது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த வெளிநாட்டுக் கடன் $9 டிரில்லியன் ஆகும்.
பாரீஸ் மன்றத்தின் ஒரு உறுப்பினராக இல்லாத சீனா, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடாக மாறியுள்ளது.
மற்ற பாரீஸ் மன்றத்தின் உறுப்பினர் அல்லாத நாடுகளில் ரஷ்யா சராசரியாக $6.1 பில்லியனையும், சவூதி அரேபியா $2.5 பில்லியன்களையும், இந்தியா $2.4 பில்லியன்களையும் வழங்கிள்ளது.